இந்தியா

முள்ளோடை-குருவிநத்தம் சாலை இருண்டு கிடப்பதால் மக்கள் அச்சம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

பாகூர்; இருண்டு கிடக்கும் முள்ளோடை -- குருவிநத்தம் சாலையில் தெரு மின் விளக்குகள் அமைத்திட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரி எல்லைப் பகுதியான முள்ளோடை சந்திப்பில் இருந்து சுமார் 3 கி.மீ., துாரத்தில் குருவிநத்தம் கிராமம் உள்ளது. இந்த சாலையில், கீழ்பரிக்கல்பட்டு, மேல் பரிக்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் இணைப்பு சாலைகளும் உள்ளன.இப்பகுதி மக்கள் புதுச்சேரி மற்றும் கடலுார் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வதற்கு முள்ளோடை -- குருவிநத்தம் சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் இதுவரை தெரு மின் விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளதால் பெரும்பாலான சாலை பகுதி இருண்டு கிடக்கிறது.இதனால், அவ்வழியாக சென்று வரும் பொது மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முள்ளோடை சந்திப்பில் இருந்து மதுக்கடைகள் அமைந்துள்ள பகுதி வரை சில இடங்களில் தெரு மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. ஆனால், மீதமுள்ள சாலை பகுதியில் மின் விளக்கு அமைக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லுாரி சென்று வரும் மாணவ, மாணவிகளும், வேலைக்கு சென்று வீடு திரும்பும் பொது மக்களும் இருள் சூழ்ந்த சாலையை அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.எனவே, பொது மக்களின் அச்சத்தை போக்கிடும் வகையில், முள்ளோடை -- குருவிநத்தம் சாலையில் தெரு மின் விளக்குகள் அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X