இந்தியா

திருமணத்திற்கு காதலனின் பெற்றோர் எதிர்ப்பு; விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை

Added : செப் 12, 2020
Share
Advertisement

புதுச்சேரி; திருமணத்திற்கு, காதலனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விரக்தியடைந்த கல்லுாரி மாணவி துாக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

தட்டாஞ்சாவடி, வி.வி.பி., நகர் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் ஹரிமுருகன்,40; இவரது மனைவி ஜீவா,36; இவர்களுக்கு காயத்ரி,20; உமா,18; என இரண்டு மகள்கள் உள்ளனர்.போட்டோ ஸ்டுடியோ வைத்திருந்த ஹரிமுருகன் மூன்று ஆண்டிற்கு முன் இறந்துவிட்டார். இவரது கடையில், சிறு வயது முதலே சேதராப்பேட்டை சேர்ந்த சரவணன்,30; வேலை செய்து வந்தார். இவர், அடிக்கடி ஹரிமுருகன் வீட்டிற்கு வந்து சென்றதில், கல்லுாரியில் பி.காம்., படித்து வந்த காயத்ரியுடன் காதல் ஏற்பட்டது.இதனை சரவணன் குடும்பத்தினர் கண்டித்தனர். ஆனால் காயத்திரியை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்த சரவணன், வீட்டை விட்டு வெளியேறி வரும் 14ம் தேதி காயத்ரியை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகளை செய்து வந்தார்.இந்நிலையில் 9ம் தேதி இரவு 7 மணியளவில் சரவணன் அப்பா ரவி, அம்மா ராணி மற்றும் உறவினர்கள், காயத்ரி வீட்டிற்கு சென்று திட்டியுள்ளனர்.அதில் மனமுடைந்த காயத்ரி நேற்று முன்தினம் காலை, சரவணனுக்கு போன் செய்து, நீ உன் குடும்பத்தோடு சென்றுவிடு, எனக்கு திருமணம் வேண்டாம் என கூறிவிட்டு மொபைலை துண்டித்துவிட்டார். சரவணன் காயத்ரிக்கு பல முறை முயற்சித்தும் போன் எடுக்கவில்லை.சந்தேகமடைந்த சரவணன் வீட்டிற்கு வந்த போது காயத்ரி இருந்த அறைக்கதவு உட்புறம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. கதவை உடைத்து பார்த்தபோது காயத்ரி துாக்கில் தொங்கினார். உடன் அவரை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர்.தகவலறிந்த டி.நகர் போலீசார் விசாரணை நடத்தினர். காயத்ரி இறப்பதற்கு முன், தனது தாய் ஜீவாவிற்கு எழுதிய கடிதம் சிக்கியது.

கடிதத்தில் கூறியிருப்பதாவது:அம்மா என்னை மன்னிச்சிடுங்க. என்னால,் உங்களுக்கும் என்னை சுத்தி இருக்கறவங்க யாருக்கும் நிம்மதி இல்லை. சரவணன் நான் உன்னை காதலித்தது தவறு. நான் என்ன தப்பு செய்தேன். சாரி டியர், என்னால் உங்கள் குடும்பத்துக்குள் சண்டை வேணாம்.சாரி மாமா. நான் இப்ப இந்த முடிவு எடுக்கிறது கூட தப்புன்னு எனக்கு தெரியும். ஆனால் இத தவிர வழி தெரியல, நேத்து வந்து சண்டை போட்டவங்க அனைவரும் எங்க அம்மாகிட்ட மன்னிப்பு கேட்கனும்.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்பேரில் டி.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X