இந்தியா

கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி இருவர் பலி

Added : செப் 12, 2020
Share
Advertisement

காட்டேரிக்குப்பம்; காட்டேரிக்குப்பத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இருவர் மின்சாரம் தாக்கி இறந்தனர்.

புதுச்சேரி மாநிலம், காட்டேரிக்குப்பம், மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் செல்வக்குமார்,35; சிமெண்ட் கலவை இயந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். இவர், நேற்று காலை காட்டேரிக்குப்பம் அம்மன் நகரை சேர்ந்த ஆசிரியர் மகேந்திரன் என்பவர் கட்டி வரும் கட்டடத்தில் மூன்றாம் தளத்தில் ஜல்லிபோடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அவருடன், விழுப்புரம் மாவட்டம் ஆயந்துாரை சேர்ந்த நவீன்குமார்,24; உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.ஜல்லி, சிமெண்ட், மணல்உள்ளிட்ட கலவையை தயார் செய்து, 'லிப்ட்' மூலம் மூன்றாவது தளத்திற்கு கொண்டு சென்று,ஜல்லி போடும் பணிநடந்தது.காலை 11:00 மணி அளவில் ஜல்லி போடும் பணி முடிந்து, மற்ற கட்டுமான தொழிலாளர்கள் கீழே இறங்கிய நிலையில், செல்வகுமார் மற்றும்நவீன்குமார் ஆகிய இருவர் மட்டும் கலவையை மேலே கொண்டு செல்ல பயன்படுத்திய 'லிப்ட்டில்' இருந்த இரும்பு ரோப்பை கழற்றினர்.அப்போது, திடீரென சாலையோரம் சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் ரோப்விழுந்தது. அதில், செல்வக்குமார் மற்றும் நவீன்குமார் ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்தது.செல்வக்குமார், மூன்றாவது மாடியில் இருந்து துாக்கி வீசப்பட்டு, கீழே சாலையில் விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.மூன்றாவது தளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த நவீன்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.தகவலறிந்த திருக்கனுார் இன்ஸ்பெக்டர் கிட்லா சத்ய நாராயணா, காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர்முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.செல்வகுமாரின் மனைவி பச்சையம்மாள் அளித்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் காட்டேரிக்குப்பம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.காங்., கோரிக்கைஇந்நிலையில், மின்சாரம் தாக்கி இறந்த கட்டட தொழிலாளர் இருவரின் குடும்பங்களுக்கு மின்துறை இழப்பீட்டு தீர்ப்பாயம் மற்றும் கட்டட தொழிலாளர் நல வாரியம் மூலம் தலா ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என காங்., செய்தி தொடர்பாளர் வீரராகவன் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், இதுதொடர்பாக தொழிலாளர் துறை அமைச்சர் கந்தசாமி, மின்சாரத்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோருக்கு காங்., சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X