இந்தியா

பைக்குகள் மோதல் தொழிலாளி பலி

Added : செப் 12, 2020
Share
Advertisement

பாகூர்; பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில், படுகாயமடைந்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கிருமாம்பாக்கம் அடுத்த வம்பாபேட் கிராமத்தை சேர்ந்தவர் வேலழகன்,32; கூலித் தொழிலாளி. இவர் கடந்த 8ம் தேதி தனது மனைவி ரம்யா, குழந்தைகள் மாயா, குமுதா ஆகியோருடன் பிஒய் 01 விசி 1732 பதிவெண் கொண்ட சுசூகி அக்செஸ் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.கிருமாம்பாக்கம் ராதா நகர் அருகே சென்ற போது, எதிரே பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் ஆகாஷ்,17; ஓட்டி வந்த டி.என். 31-ஏடி 2043 பதிவெண் கொண்ட பைக் மீது நேருக்கு நேர் மோதியது.அதில், வேலழகன், அவரது மனைவி மற்றும் குழந்தைகளும், ஆகாஷூம் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அனைவருக்கும் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு வேலகழகன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X