இந்தியா

கடற்கரை சாலையில்'லே கபே' திறப்பு

Added : செப் 12, 2020
Share
Advertisement

புதுச்சேரி; கடற்கரை சாலையில் உள்ள, சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான லே கபே ஓட்டல் செயல்பட துவங்கி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாத கடைசி வாரத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், கடைகள், ஓட்டல்கள், டீ கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான லே கபே, சீகல்ஸ் ஓட்டல்களும் மூடப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின், கடற்கரை சாலையில் உள்ள லே கபே ஓட்டல் திறக்கப்பட்டது.கடைகளை திறப்பதற்கு நேரக் கட்டுப்பாட்டு, கடற்கரை சாலை மூடப்பட்டது போன்ற காரணங்களால் லே கபே ஓட்டல் திறக்கப்படுவதும், மூடப்படுவதுமாக இருந்தது. தற்போது, பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.இருந்தபோதும், கடற்கரை சாலை மதியம் 12:00 மணிக்கு மூடப்படுவதால், காலையில் 6:00 மணியளவில் திறக்கப்பட்டு, மதியம் வரை இயங்கி வருகிறது.லே கபே ஓட்டலுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் விரும்பி வருவது வழக்கம். தற்போது, சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை உள்ளதால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இதனால், உள்ளூர் மக்களையும், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளையுமே லே கபே நம்பி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X