இந்தியா

பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு மர்ம ஆசாமிகள் இருவருக்கு வலை

Added : செப் 12, 2020
Share
Advertisement

புதுச்சேரி; நடந்து சென்ற பெண்ணிடம் 3.5 சவரன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள் இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.மேட்டுப்பாளையம், காந்திதிருநல்லுாரை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகள் கவிதா,41; குரும்மாம்பேட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.இவர், கடந்த 8ம் தேதி இரவு 8.30 மணிக்கு அமைதி நகரில் உள்ள தனது தம்பி வீட்டில் இருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது பின்புறமாக பல்சர் பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், கவிதா அணிந்து இருந்து 3.5 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம ஆசாமிகள் இருவரை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X