இந்தியா

மருமகளுடன் தகராறு மாமியார் தற்கொலை

Added : செப் 12, 2020
Share
Advertisement

புதுச்சேரி; மருமகளுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் மாமியார் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.முருங்கம்பாக்கம், பள்ளத் தெருவை சேர்ந்தவர் ராமசாமி மனைவி லட்சுமி,45; இவர், முருங்கப்பாக்கம் ஆயுர்வேத மருத்துவமனையில் உதவியாளராக வேலை செய்து வந்தார். கணவரை இழந்த இவர், மகன் பாலமுருகன்பராமரிப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில் லட்சுமிக்கும், அவரது மருமகள் வினிதாவிற்கும், வீட்டு வேலை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது.அதில் மனமுடைந்த லட்சுமி, நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணியளவில் வீட்டின் ஹாலில் துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். அதனைக் கண்டு திடுக்கிட்ட குடும்பத்தார் அவரை காப்பாற்றி, அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை, பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X