இந்தியா

72.44 சதவீதம் குணம்- கொரோனா பாதிப்பு 19 ஆயிரத்தை தாண்டியது; நேற்று 504 பேருக்கு தொற்று: 12 பேர் பலி

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020
Share
Advertisement
72.44 சதவீதம் குணம்- கொரோனா பாதிப்பு 19 ஆயிரத்தை தாண்டியது; நேற்று 504 பேருக்கு தொற்று: 12 பேர் பலி

புதுச்சேரி; புதுச்சேரியில் நேற்று புதிதாக 504 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 26 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டில் 12 பேர் இறந்துள்ளனர்.இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியதாவது:புதுச்சேரியில் நேற்று அதிகபட்சமாக 2,823 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி 438, காரைக்கால் -35, ஏனாம் -27, மாகி - 4 பேர் என மொத்தம் 504 பேருக்கு (17.85 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 365 ஆக உயர்ந்துள்ளது.மாநிலத்தில் இதுவரை 19,026 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 13,783 பேர் அதாவது 72.44 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் புதுச்சேரியில் 353 பேர், காரைக்காலில் 31 பேர், ஏனாமில் 10 பேர் என மொத்தம் 394 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.புதுச்சேரியில் 2,808 பேர், காரைக்காலில் 184 பேர், ஏனாமில் 126, மாகியில் 18 பேர் என 3,136 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,429 பேர், காரைக்காலில் 103 பேர், ஏனாமில் 183 பேர், மாகியில் 27 பேர் என மொத்தம் 1,742 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாநிலத்தில், இதுவரை 92,904 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 71,196 பேருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.கொரோனா தொற்றால் பாதித்து இறந்தவர்களில், பலரது இறப்பு திடீரென நிகழ்ந்ததாக உள்ளது. காரணம், பலர் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு வருகின்றனர்.எனவே, எந்த வீட்டில் யாருக்கு உடல்நிலை சரியில்லை என சென்று விசாரிக்குமாறு கிராமப்புற செவிலியர்கள் மற்றும் ஆஷா பணியாளர்களை அறிவுறுத்தியுள்ளேன். மேலும், கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக ஆசிரியர்கள் தயார் செய்த வீடியோ யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடம் சென்றால் விழிப்புணர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X