இந்தியா

அரசு பள்ளி வளாகத்தில் குறுங்காடு வளர்ப்பு திட்டம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

பாகூர்; தனசுந்தராம்பாள் சமூக அமைப்பு சார்பில், அபி ேஷகப்பாக்கம் சேத்திலால் அரசு உயர் நிலைப்பள்ளி வளாகத்தில், குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டது.

தனசுந்தராம்பாள் சமூக அமைப்பு, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துடன் இணைந்து, அபிேஷகப்பாக்கம் சேத்திலால் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், ஜப்பான் நாட்டின் தாவரவியலாளர் அகிரா மியாவாக்கியின் குறுங்காடு உருவாக்கும் திட்டத்தின்' கீழ் மரக்கன்றுகள் நடும் பணி நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு, சமூக அமைப்பு நிறுவனர் ஆனந்தன் வரவேற்றார். அரசு கொறடா அனந்தராமன் காடு வளர்ப்பு திட்டத்தை துவக்கி வைத்தார்.பள்ளி தலைமையாசிரியர் பாக்கியலட்சுமி தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் தனராஜ் முன்னிலை வகித்தார். செல்லம்மா பவுண்டேஷ் நிர்வாகி தில்லை சரிதா பழனிசாமி வாழ்த்தி பேசினார். தனசுந்தராம்பாள் சமுக அமைப்பு நிறுவனர் ஆனந்தன் கூறுகையில் ''பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியில் 1500 சதுர அடி பரப்பளவு கொண்ட இடம் தேர்வு செய்யப்பட்டு, 3 அடி ஆழத்திற்கு குழி பறித்து அதில் இயற்கை உரங்களை நிரப்பிய பின்னர் பாதாம், நாவல், மகிழம், மஞ்சள் கொன்றை, புங்கன், நாகலிங்கம், சரக்கொன்றை, வில்வம் என 500 மரக்கன்றுகள் நடப்பட்டது.குறுகிய இடைவெளியில் மரக்கன்றுகள் நெருக்கமாக நட்டு வைக்கப்பட்டுள்ளதால், சூரிய ஒளியையும், நீரையும் பெற மரக்கன்றுகள் ஒன்றுக்கொன்று போட்டிப் போடுவதன் மூலமாக, பல நுாறு ஆண்டுகளில் வளர வேண்டிய மரங்கள், குறுகிய காலத்திலேயே விருட்சமாக வளர்ந்து நிற்கும். இதன் மூலமாக மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும் என்றார்.''இந்நிகழ்ச்சியில், நேருயுவ கேந்திரா ஒருங்கிணைப்பாளர் தெய்வசிகாமணி, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன், அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை, தொழில்நுட்ப வல்லுநர் சிவக்குமார், உதவி ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை லெனின், சதிஷ், சுரேஷ், உதயகுமார், மனிஷ், ரவிச்சந்திரன், வண்டிமுத்து, அன்பு ராம்சந்திரன், மணிகண்டன், எழிலரசன், ஆறுமுகம், அப்துல்காதர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X