இந்தியா

இணைப்பு கல்லுாரிகளின் இறுதியாண்டு தேர்வு 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Added : செப் 12, 2020
Share
Advertisement

புதுச்சேரி; நாளை மறுநாள் துவங்க இருந்த இணைப்பு கல்லுாரி மாணவர்களின் இறுதியாண்டு தேர்வை, வரும் 21ம் தேதிக்கு பல்கலைக் கழக தேர்வு துறை தள்ளி வைத்துள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகம், இணைப்பு கல்லுாரிகளின் இறுதியாண்டு மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி முதல் 29ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என தனது இணையதளத்தில் கடந்த 31ம் தேதி அறிவித்தது. அடுத்த ஓரிரு நாளில் தேர்வு அட்டவணையை வெளியிட்டது.ஆனால், தேர்வுகள் ஆன்லைனிலா அல்லது ஆப் லைனிலா, தேர்வு நேரம் எவ்வளவு, மதிப்பெண் குறைக்கப்படுமா என்ற எந்த தகவலையும் பல்கலைக் கழகம் அறிவிக்காததால், மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது.இந்நிலையில் கடந்த 7ம் தேதி மாலை தேர்வுகள் ஆப் லைனில், மூன்று மணி நேரத்திற்கு, 75 மதிப்பெண்ணிற்கு நடைபெறும் என பல்கலை நிர்வாகம், இணைப்பு கல்லுாரிகளுக்கு சுற்றிக்கை அனுப்பியது.இந்த தகவல் மறுநாள் 8ம் தேதிதான் மாணவர்களுக்கு அந்தந்த கல்லுாரிகளில் இருந்து தெரிவிக்கப்பட்டது.குறுகிய காலத்திற்குள் தேர்வுக்கு தயாராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் வேறு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என கல்லுாரி மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதனையேற்று, நாளை மறுநாள் 14ம் தேதி துவங்க இருந்த இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வை, வரும் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்து பல்கலை தேர்வாணையர் லாசர் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அவர், இணைப்பு கல்லுாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வரும் 14ம் தேதி துவங்க இருந்த இறுதியாண்டு தேர்வுகள் வரும் 21 ம் தேதி துவங்கும். தேர்வுக்கான கால அட்டவணை வெப்சைட்டில் வெளியிடப்படும்.மாணவர்கள் ஆப்-லைன் அல்லது ஆன்-லைன் முறையில் தேர்வு எழுதலாம். இது தொடர்பாக கல்லுாரி முதல்வரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் எனக் கூறப் பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X