இந்தியா

பயிர் பாதுகாப்பு உபகரணங்கள் செயல் விளக்கம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

புதுச்சேரி; ஆத்மா திட்ட விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தும் முறைகள் குறித்த செயல் விளக்க முகாம் சன்னியாசிக்குப்பத்தில் நேற்று நடந்தது.மதகடிப்பட்டு உழவர் உதவியக உதவி வேளாண் அலுவலர் திருமுருகன் வரவேற்றார். வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். முகாமில், பயிர் பாதுகாப்பு உபகரணங்களை பழுது நீக்கும் நிபுணர் ஆதிமூலம், உபகரணங்களை கையாளும் முறை, பராமரிப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தார். இதில், சன்னியாசிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கிராம விரிவாக்க பணியாளர்கள் குமரன், சிவானந்தம் ஆகியோர் செய்து இருந்தனர்.வட்டார தொழில்நுட்ப மேலாளர் குமரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X