இந்தியா

வாட்ஸ்ஆப் வீடியோ மூலம் பொதுமக்கள் குறைகேட்பு: கவர்னர் மாளிகை அறிவிப்பு

Added : செப் 12, 2020
Share
Advertisement

புதுச்சேரி; பொதுமக்களின் குறைகள் வாட்ஸ் ஆப் வீடியோ மூலம் கேட்க உள்ளதாக, கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, தினசரி பொதுமக்களை நேரடியாக சந்தித்து, குறைகளை கேட்டு வந்தார்.

கொரோனா பரவல் துவங்கியவுடன், பொதுமக்கள் குறை கேட்பது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் கவர்னர் கிரண்பேடி, வாட்ஸ் ஆப் வீடியோ மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கவர்னர் கிரண்பேடி, பொதுமக்களின் குறைகளை கேட்கும் நிகழ்வை மீண்டும் தொடங்குகிறார். கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி திங்கள் முதல் புதன் கிழமை வரை மாலை 5:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வாட்ஸ் ஆப் வீடியோ அழைப்பு மூலம் மட்டுமே மக்களின் குறைகளை கேட்கிறார். இது வரும் செப்., 14 முதல் தொடங்குகிறார். கவர்னரிடம் தங்கள் குறைகளை முறையிட விரும்பும் பொதுமக்கள் காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, 0413-2337144, 2334050, 2334051 என்ற ராஜ் நிவாஸ் தொலைபேசி எண்கள் மூலம் பதிவு செய்யலாம்.பொதுமக்களின் குறைகளை கவர்னர் மற்றும் அவரது குழுவினரால் 95005 60001 என்ற வாட்ஸ் ஆப் வீடியோ எண்ணில் மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை கேட்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X