இந்தியா

கவர்னரை எதிர்த்து போராடுவதால் ஊழியர்களுக்கு சம்பளம் கிடைத்து விடாது: தி.மு.க., அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., சாடல்

Added : செப் 12, 2020
Share
Advertisement

புதுச்சேரி; கவர்னருக்கு நோட்டீஸ் அனுப்புவது, எதிர்த்து போராடுவதால், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் கிடைத்துவிடாது என தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது.

தி.மு.க., தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரியில் கடந்த 2016 சட்டசபை தேர்தலின்போது, காங். கட்சி, வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை என வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்த பின்பு, நடப்பது வேறாக உள்ளது. அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை.போலீசில் 412 இடங்களை நிரப்பும் பணி அறிவிப்போடு நின்றுவிட்டது. பொதுத்துறை கூட்டுறவு நிறுவனங்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றும் 10 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. பல ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.இதற்கு முந்தைய ஆட்சியாளர்களே காரணமாக இருந்தாலும், தற்போதும் கூட்டுறவு நிறுவனங்களை மேம்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கூட்டுறவு நிறுவனங்கள் செயல்படாததற்கும், ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காததற்கும் தற்போதைய அரசுக்கும் பங்கு உண்டு என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.நிலுவை சம்பளம் வழங்கக்கோரி, பாசிக், பாப்ஸ்கோ ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இது அரசுக்கு இழுக்கு என்பதோடு, கடந்த நான்கரை ஆண்டு கால ஆட்சி நிர்வாகத்தின் தோல்வியை காட்டுகிறது.பாசிக், பாப்ஸ்கோ நிறுவனத்தை திறந்து, நிலுவை சம்பளம் வழங்கி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இல்லையென்றால், மற்ற கூட்டுறவு, அரசு சார்பு நிறுவன ஊழியர்களும் நிலுவை சம்பளம் கேட்டு போராடுவார்கள். இது, அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்கவுள்ள காங்., கட்சிக்கு சவாலாக இருக்கும்.கவர்னருக்கு நோட்டீஸ் அனுப்புவது, கவர்னரை எதிர்த்து போராட்டம் நடத்துவதால், பசியால் வாடும் ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்கிவிடாது. இதை உணர்ந்து, உடனடியாக சம்பளம் கிடைக்கவும், கூட்டுறவு அரசு சார்பு நிறுவனங்களை திறந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களில் 50 சதவீதமாவது, 2 மாதங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X