இந்தியா

தேர்வை ரத்து செய்ய வேண்டி மாணவர்கள் ஊர்வலம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

புதுச்சேரி; பல்கலைக்கழகத்தின் அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டி, மாணவர்கள் நேற்று ஊர்வலமாக சென்று முதல்வரிடம் மனு அளித்தனர்.புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்கலைக்கழகத்தின் அனைத்து தேர்வுகளை ரத்து செய்ய வேண்டி, மாணவர் கூட்டமைப்பினர் நேற்று ஊர்வலம் சென்றனர்.புதுச்சேரி ராஜா தியேட்டரில் துவங்கிய ஊர்வலம், நேரு வீதி, மிஷன் வீதி வழியாக தலைமை தபால் நிலையம் அருகே நிறைவடைந்தது. அங்கு பல்கலைக்கழக தேர்வுகளை ரத்து செய்ய வேண்டி கோஷமிட்டனர். பின்னர் முதல்வர் நாராயணசாமியை சந்தித்து தேர்வை ரத்து செய்யக்கோரி மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X