இந்தியா

எம்.எல்.ஏ., ஆதரவாளர் கொலை வழக்கு கைதான 5 பேருக்கு கொரோனா பரிசோதனை

Added : செப் 12, 2020
Share
Advertisement

புதுச்சேரி; காங்., எம்.எல்.ஏ., ஆதரவாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர், கொரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள் ளனர்.

முத்தியால்பேட்டை, சின்னையாபுரத்தை சேர்ந்தவர் கணேசன்,54; கதர் வாரிய துணை முதன்மை செயல் அதிகாரியான இவர், காங்., கட்சியை சேர்ந்த லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ.வின் தீவிர ஆதரவாளர்.இவர் கடந்த 7ம் தேதி மாலை பைக்கில் சென்றபோது, வாழைக்குளம் அருகே மர்ம கும்பல் வழி மறித்து வெட்டி கொலை செய்தது.முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், கிடைத்த தகவலின் பேரில், கணேசனை கொலை செய்த வாழைக்குளத்தை சேர்ந்த வெங்கடேசன், அரவிந்தன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து, கொரோனா பரிசோதனைக்காக ஜிப்மரில் அனுமதித்துள்ளனர்.விசாரணை அதிகாரி மாற்றம்:கொலை வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால் வழக்கை விசாரித்து வந்த முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரை மாற்றிவிட்டு, உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் சஜித்திடம் வழக்கை ஒப்படைத்து சீனியர் எஸ்.பி. பிரதிக் ஷா கோத்ரா உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் சஜித், தனது விசாரணையை நேற்று துவக்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X