அமெரிக்காவை சீனாவுக்கு விற்கும் ஜோ பிடன் குடும்பம்: டிரம்ப் புகார்

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
america, china, sells, joe biden, family, அமெரிக்கா, சீனா, ஜோ பிடன், குடும்பம்

வாஷிங்டன்: '' ஜோ பிடன் குடும்பம், அமெரிக்காவை சீனாவுக்கு விற்கும் வேலையை செய்து வருகிறது,'' என, டிரம்ப் குற்றஞ்சாட்டிஉள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல், நவ., 3ல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில், அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். 10 சதவீத பங்குஅவரை எதிர்த்து, ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் நிற்கிறார். இந்நிலையில், டிரம்ப் வெள்ளை மாளிகையில் பேசியதாவது:ஜோ பிடனுக்கு சீனா மீது தனி பாசம். அதற்கு காரணம் உள்ளது. ஜோ பிடன் மகன், ஹன்டர் பிடன், சீனாவைச் சேர்ந்த, 'போஹய் ஹார்வெஸ்ட்' என்ற நிதி நிறுவனத்தில், 10 சதவீத பங்கை வைத்துள்ளார். இந்நிறுவனம், மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்த, வாகன உதிரிபாகங்கள் நிறுவனத்தை, சீனாவின் ராணுவ ஒப்பந்ததாரருக்கு விற்பனை செய்ய உதவிஉள்ளது. அமெரிக்க தயாரிப்பு நிறுவனங்களின் வேலைகளை, சீன ராணுவம் பெற உதவியதன் மூலம், ஜோ பிடன் குடும்பம், பெருந்தொகையை பெற்றுள்ளது.

ஜோ பிடன் அதிபரானால், அமெரிக்கா, சீனாவுக்கு சொந்தமாகி விடும்.அணு ஆயுத ஒப்பந்தம்கொரோனா பரவலை தடுக்க தவறியதாக என் மீது குற்றஞ்சாட்டும் ஜோ பிடன், 2009ல், துணை அதிபராக இருந்தபோது, பன்றிக் காய்ச்சல் பரவலை தடுக்க தவறி, ஆறு லட்சம் பேர் பாதிக்கப்பட காரணமாக இருந்ததை மறந்து விடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். ஜோ பிடன், தன் பிரசாரத்தில், ''டிரம்ப், ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதால், அந்நாடு ஆயுத கொள்முதலை அதிகரித்துள்ளது. நான் அதிபரானால், மீண்டும் ஒப்பந்தம் செய்து, ஆயுத தயாரிப்பை கட்டுப்படுத்து வேன்,'' என்றார்.


அமெரிக்காவிடம்புதிய அணு ஆயுதங்கள்அமெரிக்க பத்திரிகையாளர், பாப் உட்வர்டு, 'ரேஜ்' என்ற தன் நுாலை சில தினங்களில் வெளியிட உள்ளார். இந்நுாலில், 'ரஷ்யா, சீனாவிடம் கூட இல்லாத, புதிய அணு ஆயுதங்களை, தான் உருவாக்கி உள்ளதாக, டிரம்ப் என்னிடம் தெரிவித்தார்' என பாப் கூறியுள்ளார். இந்த தகவல் வெளியானதும், 'அரசு ரகசியங்களை, டிரம்ப் எப்படி வெளியிடலாம்' என, அமெரிக்க பத்திரிகைகள் கேள்வி எழுப்பின. அதற்கு, 'அரசு ரகசியத்தை வெளியிடவில்லை' என்ற டிரம்ப், 'மிகப்பெரிய ஆயுதங்கள் உள்ளதாக தான் தெரிவித்தேன்' என, மழுப்பியுள்ளார்.


latest tamil newsகமலா ஹாரிஸ், துணை அதிபர் வேட்பாளர், ஜனநாயக கட்சிஜோ பிடன் பிரசாரத்திற்கு 'லகான்' பாடல்அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவாக, லகான் ஹிந்தி திரைப்படத்தில் இடம் பெற்ற, 'சலோ சலோ' பாடல் 'ரீமிக்ஸ்' செய்து சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியினர் மற்றும் தெற்காசிய வாக்காளர்களின் ஓட்டுகளை கவர, அஜய் - வினிதா புடோரியா தம்பதி, இந்த, 'வீடியோ'வை வெளியிட்டுள்ளனர்.


ரஷ்ய கணினி நாசக்காரர்கள் கைவரிசைகடந்த, 2016ல், அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்ய ராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த ஒரு அமைப்பு தான், ஜனநாயக கட்சியினரின் கணினி ஒருங்கிணைப்பில் புகுந்து, அரசியல் போக்கை நிர்ணயித்தது. தற்போதும், இதே அமைப்பு தான், வேட்பாளர்கள், தேர்தல் பிரசாரகர்கள், ஆலோசகர்கள் உட்பட, 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் கணினிகளில் புகுந்து தகவல்களை திருடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது

.டாம் பர்ட், துணை அதிபர், மைக்ரோசாப்ட்

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palan - Bangalore,இந்தியா
12-செப்-202018:58:34 IST Report Abuse
Palan இவர் ஒரு அண்ட புழுகு ஆகாச புழுகு. மிகவும் தரம் தாழ்ந்தவர்
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
12-செப்-202011:40:54 IST Report Abuse
skv srinivasankrishnaveni இதுக்குபயபகர வயறு எரிச்சல் அல்சர் கொடூரமா படுத்தறது சுடாலின் போல குரிசிபோடுமோ என்று பயம் மூஞ்சிய பாரேன் அழுகிய சுரைக்காய்போல யு எஸ் லே ஆண்டவர்களிலேயே கேவலமான ஆளு
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
12-செப்-202008:41:44 IST Report Abuse
Sampath Kumar ஆஹா அற்புதம் என்ன ஒரு ஸ்டாயெமென்ட் ஆக்க உங்க முதலித்துவம் கம்யூனிசம் இடம் மண்டி இடுகிறது சார் ??/ இப்புடி பட்ட கன்டுபிடிப்பு ?? அப்பா சீனாக்காரன் தான் உங்களை விட பெயரியவன் போல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X