சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியருக்கு பாலியல் தொந்தரவு

Added : செப் 12, 2020
Share
Advertisement

சோழவரம் : இரண்டு சிறுமியருக்கு, பாலியல் தொந்தரவுகொடுத்தவரை, 'போக்சோ' சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து, போலீசார் தேடி வருகின்றனர்.

சோழவரம் பகுதியை சேர்ந்த, 9 வயது சிறுமி, கடந்த, 9ம் தேதி வீட்டின் அருகில் உள்ள செடியில் பூப்பறிக்க சென்றார்.அப்போது, அதே பகுதியை சேர்ந்த மனோகரன், 50, என்பவர், தன் வீட்டில் நிறைய பூக்கள் இருப்பதாக கூறி, வீட்டினுள் அழைத்து சென்று, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.அவரது பிடியில் இருந்து தப்பிய சிறுமி அழுது கொண்டே, வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.

சிறுமியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த மனோகரன், ஏற்கனவே அதே பகுதியைச் சேர்ந்த, 8 வயது சிறுமி ஒருவருக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.மேற்கண்ட இரண்டு சிறுமியரின் பெற்றோர், மனோகரன் மீது, பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 'போக்சோ' சட்டத்தின் கீழ், போலீசார் வழக்கு பதிந்து, மனோகரனை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X