பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்..,

Added : செப் 12, 2020
Share
Advertisement

தார்ச்சாலை பணி

திருவலாங்காடு: திருவாலங்காடு ஒன்றியம், ஜாகீர்மங்கலம் ஊராட்சி, ராஜரத்தினபுரம் பகுதியில் இருந்து, மணவூர் கிராமத்திற்கு செல்லும் தார்ச்சாலை குண்டும், குழியுமாக மாறி பழுதடைந்தது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.இதையடுத்து, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், இச்சாலை சீரமைக்க, 10 லட்சம் ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்று, தார்ச்சாலை அமைக்கும் பணிகளை திருவாலங்காடு ஒன்றிய குழுத் தலைவர் ஜீவா துவக்கி வைத்தார். இப்பணிகள் ஒரு மாதத்திற்குள் முடித்து வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு விடப்படும்.

பாலாபிஷேகம்

திருத்தணி: திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகையில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், பாலாபிஷேக உற்சவ விழா நேற்று நடந்தது.அதிகாலை, 5:00 மணிக்கு, சுப்ரபாதம், காகட ஆரத்தி நடந்தது. காலை, 9:00 மணிக்கு, ருத்ர ஹோமம் நடந்தது. பின், காலை, 11:00 மணிக்கு, மூலவருக்கு, 1,008 லிட்டர் பாலாபிஷேகம், மதியம், மாலை, மற்றும் இரவு ஆரத்தியுடன் உற்சவ விழா நிறைவடைந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X