பொது செய்தி

தமிழ்நாடு

தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுபவர்களுக்கு பரிசோதனை

Added : செப் 12, 2020
Share
Advertisement

திருவள்ளூர்: 'பொதுத்தேர்வில், மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு எழுத உதவுபவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்' என, கலெக்டர் - பொறுப்பு -முத்துசாமி அறிவுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை விபரம்:இம்மாதம் மற்றும் அடுத்த மாதம் எட்டாம் வகுப்பு தனித் தேர்வு, பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் பட்டயத் தேர்வுகள் நடைபெற உள்ளது.இந்த தேர்வில் சென்னை உயர் நீதிமன்ற ஆணையின்படி, மாற்றுத்திறனாளிகள் சொல்வதை எழுதுபவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.

ஆகையால், மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு எழுதுபவர்கள், அவர்களதுவிருப்பத்தின்படி, கொரோனா பரிசோதனைசெய்துக் கொள்ள வேண்டும். இந்த பரிசோதனையினை மேற்கொள்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் உள்ள 94455 46441, 94431 08601, 98414 40379, 77087 23064, 95971 41225 ஆகிய மொபைல் எண்ணுக்கு வரும், 15ம் தேதிக்குள் தொடர்பு கொண்டால், கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

சொல்வதை எழுதுபவர் சலுகை கோரும் மாற்றுத்திறனாளிகள், 'கோவிட்- - 19' தொற்று இல்லை என்பதற்கான மருத்துவச் சான்றினை தேர்வு மையத்திற்கு வருகை புரியும் போது உடன் எடுத்து வர வேண்டும்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X