பொது செய்தி

தமிழ்நாடு

மது வேண்டாம்: துண்டு பிரசுரங்கள் வினியோகம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

ஆர்.கே.பேட்டை,

ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மையார்குப்பம் ஊராட்சியில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். ஐந்து பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.மேலும், ஆந்திர மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால், எல்லையோர குக்கிராமங்களில் வசிப்பவர்கள், சென்னை செல்வதற்காக, அம்மையார்குப்பம் மார்க்கமாக பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், அம்மையார்குப்பம், வள்ளலார் நகரில் அமைந்துள்ள ஆந்திரா பஸ் நிலையம் பகுதியில், இரவு, பகல் என, எந்நேரமும், மதுபிரியர்கள் கொட்டமடித்து வருகின்றனர்.இதனால் விரக்கி அடைந்த வள்ளலார் நகர் மக்கள், 'இந்த பகுதியில் மது அருந்த வேண்டாம்' என, துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X