பொது செய்தி

தமிழ்நாடு

'விப்ரோ - வாஷிங் லிக்விட்' அறிமுகம்

Added : செப் 12, 2020
Share
Advertisement
சென்னை : 'விப்ரோ' நிறுவனம், புதிய துணி துவைக்கும் திரவத்தை அறிமுகம் செய்துள்ளது.நாட்டின் முன்னணி, சுகாதார பொருட்கள் தயாரிக்கும், 'விப்ரோ' நிறுவனம், நுகர்வோர்கள் வசதிக்காக, 'விப்ரோ சேப்வாஷ் ஆண்டி-ஜெம் லிக்விட் டிடர்ஜன்ட்' எனும், துணி துவைக்க பயன்படும் திரவத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.முழுதும், கிருமி நாசினி பாதுகாப்பு முறைகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரவம்,

சென்னை : 'விப்ரோ' நிறுவனம், புதிய துணி துவைக்கும் திரவத்தை அறிமுகம் செய்துள்ளது.

நாட்டின் முன்னணி, சுகாதார பொருட்கள் தயாரிக்கும், 'விப்ரோ' நிறுவனம், நுகர்வோர்கள் வசதிக்காக, 'விப்ரோ சேப்வாஷ் ஆண்டி-ஜெம் லிக்விட் டிடர்ஜன்ட்' எனும், துணி துவைக்க பயன்படும் திரவத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.முழுதும், கிருமி நாசினி பாதுகாப்பு முறைகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரவம், ஆடைகளில் உள்ள கிருமிகளை, 99 சதவீதம் அழிக்கிறது.இதன் வாயிலாக, ஆடைகள் புதிதாகவும், சுத்தமாகவும் மட்டுமின்றி, கிருமிகள் இன்றி பாதுகாப்பாகவும் இருக்கும்.

அமிலத் தன்மையற்ற இந்த திரவம், துணிகளில் உள்ள கறைகளை சுத்தம் செய்வதுடன், 75 முறைக்கு மேல் துவைத்தாலும், அவற்றின் வண்ணங்கள் மாறாமலும், சேதமடையாமலும் பாதுகாக்கிறது.ஒரு லிட்டர், 235 ரூபாய்க்கு கிடைக்கும் இத்திரவம், பல்நோக்கு பயன்பாட்டிற்கும் உதவுகிறது.இதை, அனைத்து விதமான, 'டாப்லோடு, பிரண்ட் லோடு மற்றும் செமி ஆட்டோமெடிக்' வாஷிங் மிஷன்களிலும், வாளிகளிலும் பயன்படுத்தி, துணிகளை துவைக்கலாம் என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X