சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி கொலை; கணவன் கைது

Added : செப் 12, 2020
Share
Advertisement

ராமாபுரம் ; மனைவி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த வழக்கில், கணவன் கைது செய்யப்பட்டார்.

ராமாபுரம், ஆண்டவர் நகரைச் சேர்ந்தவர், முருகன், 58. இவரது மனைவி கங்கா, 55. இவர்களது மகன் பாலசுப்பிரமணியம், 30. மது பழக்கத்திற்கு அடிமையான முருகன், தினமும் மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.கங்கா மகனிடம் கூற, சில தினங்களுக்கு முன், தந்தையை மகன் கண்டித்தார். இந்நிலையில், 7ம் தேதி, பாலசுப்பிரமணியம் வேலை நிமித்தமாக திருச்சி சென்றார்.

அன்று இரவு, மது போதையில் வந்த முருகன், மனைவியிடம் தகராறு செய்தார். மேலும், வீட்டில் இருந்த அம்மிக்கல்லை, கங்கா தலையில் போட்டார்.இதில், பலத்த காயமடைந்த கங்காவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ராயலா நகர் போலீசார் விசாரித்தனர். சிகிச்சையில் இருந்த கங்கா, நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக போலீசார் மாற்றி, முருகனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X