சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உதவி கமிஷனர் பெயரில் போலி; பணம் பறிக்க முயன்றதால் அதிர்ச்சி

Added : செப் 12, 2020
Share
Advertisement
 உதவி கமிஷனர் பெயரில் போலி; பணம் பறிக்க முயன்றதால் அதிர்ச்சி

தண்டையார்பேட்டை : தண்டையார்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர் பெயரில், போலி முகநுால் கணக்கு துவங்கி, பண உதவி கேட்டு தகவல் அனுப்பிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, தண்டையார்பேட்டை சரக போலீஸ் உதவி கமிஷனராக இருப்பவர் ஜூலியட் சீசர். இவருக்கு, திடீரென அவரின் நெருங்கிய நண்பர்கள், மொபைல் போனில் தொடர்பு கொண்டனர். அதில், 'உங்களுக்கு உடல் நிலை சரியில்லையா; வறுமையில் இருக்கிறீர்களா; பணம் உதவி கேட்டுள்ளீர்களே?' என, விசாரித்தனர்.அதிர்ச்சியடைந்த உதவி கமிஷனர், விபரங்களை கேட்க, அவர் பெயரில் போலி முகநுால் கணக்கு இருப்பது தெரிய வந்தது.

மேலும், அவரது முகநுால் கணக்கை முடக்கியதோடு, அவரை போலவே ஒரு போலி முகநுால் கணக்கை ஆரம்பித்து, அதில், ஜூலியட் சீசர் தொடர்புடைய நண்பர்கள், உறவினர்கள் மொபைல் போன் எண்ணை எடுத்து, அதில், தான் வறுமையில் வாடுவதாகவும், பணம் உதவி செய்யுங்கள் என கேட்டது தெரிய வந்தது.உடனடியாக, அந்த முகநுால் பக்கத்தில், இது போலியானது என, உதவி கமிஷனர் எச்சரித்து உள்ளார்.

இது தொடர்பாக, ஜூலியட் சீசர், சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடக்கிறது.உதவி கமிஷனர் பெயரில், போலி கணக்கு துவங்கி, பண உதவி கேட்ட சம்பவம், காவல் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X