சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'நேர்ல வந்து மாவட்டத்தை பாருங்க' அ.தி.மு.க., பிரமுகர்கள் மிரட்டல்

Added : செப் 12, 2020
Share
Advertisement

எண்ணுார்: எண்ணுார் அருகே, தனியார் ரசாயன நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத்த, அ.தி.மு.க., பகுதி செயலர் மற்றும் நிர்வாகிகள் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, எண்ணுார், பெரிய குப்பம் பகுதியில் தனியார் உரத் தொழிற்சாலை செயல்படுகிறது. கடந்த, 9ம் தேதி காலை, திருவொற்றியூர், அ.தி.மு.க., பகுதிச் செயலர் கிருஷ்ணன், அ.தி.மு.க., நிர்வாகி முருகவேல் உட்பட ஐந்து பேர், நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்து, பாதுகாவலர்களை மிரட்டியுள்ளனர்.மேலும், 'தொழிற்சாலைக்கு தேவையான கடல் நீரை, எதன் அடிப்படையில் பெறுகிறீர்கள், அதற்கான ஆவணங்களை காட்டுங்கள்' என, ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துஉள்ளனர்.

மேலும், 'இது குறித்து மாவட்டச் செயலரை, தொழிற்சாலை நிர்வாகத்தினர் நேரில் சந்திக்க வேண்டும்; இல்லாவிடில், பிரச்னைகளை சந்திக்க நேரிடும்' எனக் கூறினர்.இது குறித்து, நேற்று முன்தினம், தொழிற்சாலையின் செயல் நிர்வாக தலைவரான சீனிவாச ராவ், 49, சார்பாக, மனிதவள மேலாளர் ராஜன் என்பவர், எண்ணுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இது குறித்து, கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி, போலீசார் விசாரிக்கின்றனர்.

பல்வேறு வழக்குகள்!

புகாருக்கு ஆளான, பகுதிச் செயலர் கிருஷ்ணன் மீது, 2018ல், பணம் கேட்டு, ஆள் கடத்தல் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. 2019ல், தேர்தல் செலவுக்காக, மணலி ஒப்பந்ததாரர் ஒருவரிடம், போனில், 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய, 'ஆடியோ' வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.திருவொற்றியூரில், மெட்ரோ ரயில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில், மாமூல் கேட்டு தகராறு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X