தமிழ்நாடு

நீர்நிலை சீரமைப்பு பணிகள்; மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

Added : செப் 12, 2020
Share
Advertisement
 நீர்நிலை சீரமைப்பு பணிகள்; மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

சென்னை : பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில் நடந்து வரும் நீர்நிலை சீரமைப்பு பணிகளை, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், நேற்று ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனை வழங்கினார்.

சென்னை, பெருங்குடி மாநகராட்சி மண்டலத்தில், 2 கோடி ரூபாய் மதிப்பில், ஜல்லடியன்பேட்டை வண்ணான்குட்டை, பள்ளிக்கரணை, ஜெயச்சந்திரன் நகர் குளம், மடிப்பாக்கம், நாயக்கர் குட்டை, புழுதிவாக்கம், கங்கையம்மன் கோவில் குளம் ஆகியவை, சீரமைக்கப்பட்டு வருகின்றன.அவற்றை, சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், நேற்று ஆய்வு செய்தார்.

வரும் மழைக்காலத்திற்குள், பணிகளை விரைந்து முடித்து, மழைநீர் சேகரிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள, மண்டல அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.அதேபோல, சோழிங்கநல்லுார் மண்டலத்தில் நடந்த வரும், நீர்நிலை சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு, ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின்போது, பெருங்குடி மண்டல உதவிக் கமிஷனர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X