சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுவன் உயிரை பறித்த தண்ணீர் லாரி; பட்டினப்பாக்கத்தில் கோர விபத்து

Added : செப் 12, 2020
Share
Advertisement
 சிறுவன் உயிரை பறித்த தண்ணீர் லாரி; பட்டினப்பாக்கத்தில் கோர விபத்து

சென்னை : பட்டினப்பாக்கத்தில், கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி, சிக்னலுக்காக நின்ற வாகனங்கள் மீது மோதியதில், 5 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், மூவர் படுகாயமடைந்தனர்.

சென்னை, எண்ணுார், அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர், ராஜேந்திரபிரசாத், 35. இவரது மனைவி மரியோலா நிஷா, 30. தம்பதிக்கு பிரனீஷ், 5, என்ற மகனும், பிரதீக் ஷா, 4, என்ற மகளும் உள்ளனர்.நேற்று காலை, ராஜேந்திரபிரசாத்தின் தாய் உமா, 55, உடல் நலக்குறைவு காரணமாக, தன் உறவினர் கோபால், 55, என்பவருடன், தரமணியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது, பிரனீஷ், பிரதீக் ஷா இருவரும், 'நாங்களும் வருகிறோம்' என, அடம் பிடித்ததால், அவர்களையும் அழைத்துச் சென்றனர்.சாந்தோம் நெடுஞ்சாலையில், அடையாறை நோக்கி செல்ல, பட்டினப்பாக்கம் சிக்னலில் நின்று கொண்டுஇருந்தனர். அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக வந்த தண்ணீர் லாரி, அவர்களது வாகனம் உட்பட, மேலும் சில இருசக்கர வாகனங்களின் மீது மோதியதுடன், தொடர்ந்து, சிக்னல் கம்பத்தில் மோதி, அதை உடைத்து நின்றது.

இந்த கோர விபத்தில், லாரிக்கு அடியில் விழுந்த சிறுவன் பிரனீஷ் மீது, லாரியின் பின் சக்கரம் ஏறி, இறங்கியதில், தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே பலியானார்.தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த அடையார் போக்குவரத்து புலனாய்வு போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்த கோபால், உமா, பிரதீக் ஷா ஆகிய மூவரை, சிகிச்சைக்காகவும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த, கொடுங்கையூரைச் சேர்ந்த ரமேஷ், 32, சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், அவரது வாகனம் சேதமடைந்தது.இந்நிலையில், தப்பி ஓடிய லாரி ஓட்டுனர், பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்த சமீர், 24, பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.விபத்து குறித்து, அடையார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X