பொது செய்தி

தமிழ்நாடு

செங்கை மாவட்டத்தில் விரைவில் அமைகிறது தோட்டக்கலை பூங்கா

Added : செப் 12, 2020
Share
Advertisement
சென்னை : செங்கல்பட்டு மாவட்டத்திற்கு புதிய அடையாளமாக, தோட்டக்கலைத் துறை வாயிலாக பிரம்மாண்டமாக பூங்கா அமைக்கப்பட உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தை மேம்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையை ஒட்டியுள்ள இந்த மாவட்டத்தில், தோட்டக்கலை பண்ணைகளும் உள்ளன. இங்கு, தரமான காய்கறி நடவுச்செடிகள், பழ

சென்னை : செங்கல்பட்டு மாவட்டத்திற்கு புதிய அடையாளமாக, தோட்டக்கலைத் துறை வாயிலாக பிரம்மாண்டமாக பூங்கா அமைக்கப்பட உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தை மேம்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையை ஒட்டியுள்ள இந்த மாவட்டத்தில், தோட்டக்கலை பண்ணைகளும் உள்ளன. இங்கு, தரமான காய்கறி நடவுச்செடிகள், பழ மரக்கன்றுகள், பூச்செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, இங்குள்ள ஆத்துார் பண்ணையை ஒட்டி, 10 ஏக்கர் பரப்பளவில், பிரம்மாண்ட தோட்டக்கலை பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இதற்காக, முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள, அரசு, ௧ கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியில், பூங்காவிற்கு தேவையான மலர் செடிகள், நிழல் தரும் பூ மரங்கள் உள்ளிட்டவை நடப்படவுள்ளன.

உள்ளூர்வாசிகள் நடைபயிற்சி, மூச்சு பயிற்சி செய்வதற்காக நடைபாதைகள் மற்றும் தியான மேடை அமைக்கப்பட உள்ளது. குழந்தைகள் விளையாட, விளையாட்டு திடல் அமைக்கப்பட உள்ளது. சத்தான உணவு பொருட்களை விற்பனை செய்வதற்காக, சிறிய உணவகமும் அமைக்கப்பட உள்ளது.

தற்போது, இந்த பூங்காவிற்கான வரைபடம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில், தோட்டக்கலைத்துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர். விரைவில் பூங்கா அமைக்கும் பணிகளை துவங்க, தோட்டக்கலைத் துறை இயக்குனர் சுப்பையன் உத்தரவிட்டு உள்ளார். இந்த பூங்கா, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு புதிய அடையாளமாக அமையும் என்ற நம்பிக்கையில், தோட்டக்கலைத்துறையினர் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X