சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடுவானில் நெஞ்சுவலி விமான பயணி மரணம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

சென்னை : துபாயிலிருந்து, சென்னை வந்த சிறப்பு விமானத்தில் பயணித்தவர், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, மாரடைப்பால் மரணமடைந்தார்.

துபாயிலிருந்து, 190 இந்தியர்களுடன், சிறப்பு விமானம், நேற்று காலை, 9:00 மணிக்கு, சென்னை வந்து கொண்டிருந்தது. அந்த விமானம், சென்னை வான்வெளியை நெருங்கிய நிலையில், அதில் பயணித்த, திருவள்ளூர் மாவட்டம், அயனம்பாக்கத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம், 55 என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. விமானத்தில் இருந்த பணிப்பெண்கள், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, அந்த விமானத்தை, அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார்.

இதையடுத்து, துபாய் விமானம், சென்னை விமான நிலையத்தில், நேற்று காலை, 9:30 மணிக்கு அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. தயாராக இருந்த மருத்துவ குழுவினர், அவரை பரிசோதித்தனர். அதில் அவர், மாரடைப்பால் மரணமடைந்தது தெரிந்தது. இந்த சம்பவம் குறித்து, விமான நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர்கள் வருகை!

பிலிப்பைன்ஸ் நாட்டில், ஆறு மாதங்களாக சிக்கித்தவித்த, 160 இந்திய மருத்துவ மாணவர்கள், சிறப்பு விமானத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 2:00 மணிக்கு சென்னை வந்தனர். அவர்களுடன் மருத்துவ சிகிச்சைக்காக, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு குழந்தை, அதன் பெற்றோர் உட்பட, மூன்று பேர் வந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X