பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டும் கை கொடுக்கும் காற்றாலை மின்சாரம்

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை:காற்றாலைகளில் இருந்து மீண்டும் அதிக மின்சாரம் கிடைப்பதால் மின் வாரியம் சிரமமின்றி மின் தேவையை பூர்த்தி செய்கிறது.தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் 8502 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் அமைத்துள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள விலைக்கு மின் வாரியம் கொள்முதல் செய்கிறது.



latest tamil news



மே முதல் செப்டம்பர் வரை காற்றாலை சீசன். நடப்பு சீசனில் காற்றாலைகளில் இருந்து தினமும் சராசரியாக 8 கோடி யூனிட் மின்சாரம் வாங்கப்பட்டது. ஆக. 7ல் 10.75 கோடி யூனிட் கொள்முதல் செய்யப்பட்டது.இதுவே இதுவரை ஒரே நாளில் மின் வாரியம் கொள்முதல் செய்ததில் அதிக காற்றாலை மின்சாரமாகும். இம்மாதம் முதல் ஊரடங்கில் அதிக தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன.இதனால் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில் இம்மாதம் முதல் வாரத்தில் காற்றாலைகளில் இருந்து ஒரு கோடி யூனிட்டிற்கு குறைவாகவே மின்சாரம் கிடைத்தது. மின் தேவையை பூர்த்தி செய்ய வாரியத்திற்கு சிரமம் ஏற்பட்டது.


latest tamil news



இந்நிலையில் சில தினங்களாக காற்றாலைகளில் இருந்து மீண்டும் தினமும் 5 -- 6 கோடி யூனிட் மின்சாரம் கிடைக்கத் துவங்கியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
12-செப்-202006:53:23 IST Report Abuse
ديفيد رافائيل அரசாங்கம் (central & state) எல்லாம் பணம் சம்பாதிக்கும் நிறுவனமாகி விட்டது.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
12-செப்-202005:42:55 IST Report Abuse
Lion Drsekar அரசு என்றால் சேவை என்பது போக இன்று தனியார்போல் வியாபாரம் என்றாகிவிட்டதால், மக்களுக்கு வரி மேல் வரி , அரசு ஊழியர்களுக்கு சம்பளம், என்று அதிகரித்துக்கொண்டே போகிறது இதுதவிர மக்கள் பிரநிதிகள் அவர்கள் உணவு, உடை, தங்கும் இடம், ஆடம்பர வாழ்வுக்கும் வரி கட்டவேண்டி இருப்பதால், மக்கள் தங்களுக்காக வாழமுடியாமல் மற்றவர்களின் ஆடம்பர வாழ்வுக்கு உழைக்கவேண்டிய ஒரு நிலைக்கு வந்துவிட்டது, ஆகவே எந்த துறையும் மக்களுக்கு தேவை இல்லை என்றாகிவிட்டது, மேலும் ஒவ்வொரு துறையிலும் இணைப்பு பெற ஆரம்பித்து தலைமுறை தலைமுறையாக இவர்களுக்கு பயனாளிகள் என்ற முறையில் கப்பம் காட்டிக்கொண்டே போகவேண்டிய ஒரு நிலை, உணவு சூரிய ஒளியை வைத்து மின்சாரம் பெற்றுக்கொள்வதற்கு உரிமை மற்றும் சுதந்திரம் கொடுத்தால் மிகப் பெரிய பிரச்னை தீருமே, கருத்தில் கொண்டால் சிறப்பாக இருக்கும், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X