பொது செய்தி

தமிழ்நாடு

ஐந்து மாதங்களுக்கு பின் பல்லாவரம் வார சந்தை திறப்பு

Added : செப் 12, 2020
Share
Advertisement
 ஐந்து மாதங்களுக்கு பின் பல்லாவரம் வார சந்தை திறப்பு

பல்லாவரம் : கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த, பல்லாவரம் வார சந்தை, ஐந்து மாதங்களுக்கு பின், நேற்று திறக்கப்பட்டது.

ல்லாவரம், பழைய டிரங்க் சாலையில், வாரம்தோறும் வெள்ளிக்கிழமை, சந்தை நடக்கிறது. இது, 80 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் சிறப்பு பெற்றதாகும். இங்கு, குண்டூசி முதல் குளிர்சாதன பெட்டி வரை, வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும்.பழைய பொருட்கள் தேவையெனில், இங்கு வந்தால் வாங்கிச் செல்லலாம். இதை தவிர, பூச்செடிகள், காய்கறி, மளிகை பொருட்கள் போன்றவைகளும், விற்பனை செய்யப்படுகின்றன.

பழைய டிரங்க் சாலையில், வெள்ளிக்கிழமை தோறும், 500க்கும் அதிகமான கடைகள் போடப்படும். சுற்றுப்புற பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்வர். இதனால், அன்று காலை முதல் இரவு வரை, திருவிழா போன்று காட்சியளிக்கும்.இந்தளவிற்கு சிறப்பு மிக்க இந்த வாரச்சந்தை, கொரோனா பரவல் காரணமாக, ஐந்து மாதங்களாக மூடப்பட்டுஇருந்தது. இந்நிலையில், நேற்று, மீண்டும் வாரச்சந்தை திறக்கப்பட்டது. ஆனால், வழக்கத்தை விட, குறைந்த கடைகளே போடப்பட்டிருந்தன. கூட்டமும் குறைவாகவே காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X