பொது செய்தி

தமிழ்நாடு

மின்னணு டிக்கெட் பயன்படுத்தினால் கட்டணத்தில் 20 சதவீதம் சலுகை: சென்னை மெட்ரோ ரயில்

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
chennai, metro, train, qr code, system, 20 percent, discount, சென்னை, மெட்ரோ ரயில், மின்னணு டிக்கெட், 20 சதவீதம் சலுகை,

சென்னை: மின்னணு முறையில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக சென்னை மெட்ரோ ரயில், கட்டணத்தில் சலுகை அறிவித்துள்ளது

இதன்படி ‛QR code' டிக்கெட் மூலமாக பயணம் செய்யும் பயணிகளுக்கு கட்டணத்திலிருந்து 20 சதவீதம் விலக்கு அளிக்கப்படும் என் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காலத்தில் பயணிகளிடம் பாதுகாப்பு நடவடிக்கையை ஊக்குவிக்கவும், டிக்கெட்டிற்காக வரிசையில் நிற்பதை தவிர்க்கவும் இந்த சலுகை அளிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


latest tamil news




பயணிகள் தங்களது ஸ்மார்ட் போன்களில் CMRL செயலியை பதிவிறக்கம் செய்து அதில் QR தொழில்நுட்பத்தின் மூலம் தங்களது டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருவழி பயணம் அல்லது இருவழி பயணம் இரண்டிற்கும் பொருந்தும்.. இந்நடைமுறை செப்., 11 முதல் வந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
12-செப்-202014:56:21 IST Report Abuse
S. Narayanan ஈ டிக்கெட் பெறுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ரயில் நிலையத்தில் கேட்டாலே நிச்சயம் கூறுவார்கள். ஆனால் ரயில் நிர்வாகம் மக்களுக்கு புரியும் படி இன்னும் கொஞ்சம் எளிமையாக கூறினால் எல்லோரும் புரிந்து கொள்ள முடியும்.
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
12-செப்-202009:58:42 IST Report Abuse
தமிழ்வேள் ஸ்மார்ட் போன் இல்லாதவன் , விரும்பாதவன் அனலாக் போன் மட்டுமே பயன்படுத்த இயன்ற முதியவர்கள் என்ன செய்வார்கள் ? ஸ்மார்ட் போனை மட்டுமே முன்னிலைப்படுத்துவது தேவையற்றது
Rate this:
Sivramkrishnan Gk - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
12-செப்-202010:39:40 IST Report Abuse
Sivramkrishnan Gkஎல்லாத்துக்கும் குறை சொல்லுங்கள். ஸ்மார்ட் போன் அனைவரும் உபயோகப்படுத்த தெரிந்து கொள்ள வேண்டுமென்று கூறாதீர்கள். எத்தனையோ முதியவர்கள் வாட்சப்பில் கலக்குகிறார்கள். ஒரு பயன் வேண்டுமென்றால் அதற்கு தகுந்தாற்போல் நம்மை ஆக்கி கொள்ளவேண்டும்....
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
12-செப்-202011:42:27 IST Report Abuse
தமிழ்வேள்பிடிக்காத ஒன்றை வலுக்கட்டாயமாக திணிப்பீர்களா?.எனக்கு ஸ்மார்ட்போன் உபயோகம் இல்லை. கிடையாது என்னும் போது அதை ஏன் வாங்கவேண்டும்.? வரவர இந்தியா வன்முறைக்களமாகிக்கொண்டுவருகிறது.....
Rate this:
Ramesh M - COIMBATORE,இந்தியா
12-செப்-202015:50:27 IST Report Abuse
Ramesh Mதமிழ்வேல் அவர்களே. ஸ்மார்ட் போனில் மட்டும் தான் டிக்கெட் கிடைக்கும் என்று சொன்னால். உங்கள் கருத்து சரி. இது கூட்டத்தை கட்டுப்படுத்த தானே தவிர. கால் இல்லதாவன் கண் தெரியாதவன் எப்படி மெட்ரோ வில் போக முடியும். பிட்சை எடுப்பவன் எப்படி போக முடியும். என்று குதர்க்கமாக கேட்டல் நெறய கேள்விகள் கேட்கலாம் மாட்டுவண்டி பயணத்தில் கூட பல நன்மைகள் பல தீமைகள் கண்டுபிடிக்கலாம். எந்த ஒரு விஷயத்திற்கும் எளிதாக குற்றம் கண்டுபிடிக்கலாம். அது எளிது....
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
12-செப்-202017:15:39 IST Report Abuse
தமிழ்வேள்மின்னணு டிக்கெட் என்பது ஸ்மார்ட் போன் வைத்திருந்தால் மட்டும்தானே சாத்தியம் ? அதைத்தான் கேட்கிறேன் . ஸ்மார்ட்போன் வைத்துள்ளவனுக்கு சலுகை மற்றவனுக்கு கூடுதல் கட்டணமா ? என்று .....
Rate this:
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
12-செப்-202009:48:14 IST Report Abuse
மூல பத்திரம் சற்று விரிவாக விளக்கவும், சாமானியர்கள் பயனடையும் விதமாக விளக்குங்கள், இதை கருத்து கூறும் வாசகர் கூட யாராவது சற்று விளக்குங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X