மதுரை; 'நீட்' தேர்வால் மன உளைச்சலுக்கு ஆளான, மதுரையை சேர்ந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் ஜோதி ஸ்ரீ துர்கா(19). இவரது தந்தை முருகசுந்தரம் எஸ்.ஐ., ஆக உள்ளார். 6வது சிறப்பு பட்டாலியன் குடியிருப்பில் இவர்களது குடும்பம் வசித்து வந்தது. ஜோதி ஸ்ரீ துர்கா, நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்தார்.

நாளை(செப்.,13) நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற பயத்தில், மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா, இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ரிசர்வ் லைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.