பொது செய்தி

இந்தியா

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு; தமிழகத்துக்கு ரூ.335 கோடி

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
revenue deficit grant, Government, releases

புதுடில்லி : மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க, தமிழகம் உள்ளிட்ட, 14 மாநிலங்களுக்கு, ஆறாவது தவணையாக, 6,195 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில், தமிழகத்துக்கு மட்டும், 335 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில், மாநிலங்களின் வரி வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க, 15வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி, தவணை முறையில் மத்திய அரசு நிதியை விடுவித்து வருகிறது.


latest tamil news


இந்நிலையில், தமிழகம், கேரளா உள்ளிட்ட, 14 மாநிலங்களுக்கு ஆறாவது தவணையாக, 6,195 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. தமிழகத்துக்கு, 335.42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த, 14 மாநிலங்களில், அதிகபட்சமாக கேரளாவுக்கு, 1,276 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஆதாரங்களை வழங்கும் வகையில் இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dineshkumar Sahadevan - hyderabad,இந்தியா
12-செப்-202019:21:05 IST Report Abuse
Dineshkumar Sahadevan இது மாநில அரசுக்கு மத்திய அரசு தர வேண்டிய பாக்கி தொகை. . இது உதவி அல்ல.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
12-செப்-202017:20:45 IST Report Abuse
Endrum Indian ரூ 335 கோடி x 30% கமிஷன் அம்மாடி ரூ 100 கோடி என்று நிம்மதிப்பெருமூச்சு விட்டது அம்மா வழியில் செல்லும் அரசு.
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
12-செப்-202015:58:13 IST Report Abuse
periasamy ஜி எஸ் டி வரி வசூலில் மூன்றாவது பெரிய வசூலை அளிக்கும் மாநிலத்திற்கு இழப்பீடு வழங்குவது கடைசி நிலையில் ஏன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X