பொது செய்தி

தமிழ்நாடு

பாரதியார் நினைவு தினம்

Added : செப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மத்திய மாவட்ட த.மா.கா., சார்பில், பாரதியார் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அவரது உருவப்படத்துக்கு, த.மா.கா., மாநில பொது செயலாளர் விடியல்சேகர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். மாவட்ட தலைவர் விஜயகுமார், பொது செயலாளர் ரபீக், மண்டல தலைவர் அன்புதம்பி, சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangarajan N - chennai,இந்தியா
12-செப்-202018:20:56 IST Report Abuse
Rangarajan N மஹாகவிக்கு வந்தனம் எட்டையபுரத்தில் பிறந்து ஆயுள் ஐ எட்டை அடையும் முன்னே தமிழ் பாட்டு பல புனைந்து தன் பாட்டால் இப்புவி ஆள்பவன். உள்ளத்தில் கண்ணனை கண்டான் எண்ணத்தில் கண்ணனை கொண்டான் கண் அதனை வைத்தான் கவி புனைவதில் கருத்தெல்லாம் அவன் நினைவில் பாரதி எண் கணக்கை விரும்பாதவன் பண் கணக்கில் தேர்ச்சிபெற்று தமிழ் பணி கணக்கில்லாமல் செய்து பண்பாட்டை பாட்டில் வைத்தான். சோம்பலை பழித்தான், பக்தியை வளர்த்தான் வீரத்தை விதைத்தான் தன் மாசறு சொற்களால் பாலூட்டி வளர்க்கையிலே பகைவன் மார்பில் வேலூட்டும் வித்தையும் சொல்லித் தரும் தமிழ் தாய்க்குத் தாலாட்டை மட்டும் வைக்கவில்லை அவன் உழைப்பே உயர்வு என்றான் நேர்மையே பாதை என்றான் சுதந்திரத்தை சுவாசித்தான் பாரதத்தின் பன்மையை நேசித்தான் தொழில் பல முனய யோசித்தான் அன்னைத் தமிழ் அவன் நாவில் குடிகொண்டாள், மஹாகவியோ தன்பால் அலர்மகளும் குடிபுக தவம் செய்தான் மணித்துளி ஒவ்வொன்றிலும் எண்ணத்தில் கோமானென வாழ்ந்தான் அவன் அகம் ஏழ்மையின் வலியில் யுகம் பல கழிப்பது போல கழித்த போதிலும் ஏகாதிபத்ய ஆட்சியை செலுத்த ஆகாத வார்த்தை பல சொல்லி ஓகோவென வாழ்ந்த இனத்தை ஒடுக்க வந்தவனின் விலா எலும்பை நொறுக்க நிந்தித்தான், சாதியெனும் பெயரில் வளர்ந்த எண்ணங்களின் பல வண்ணங்களை - அவர்களை சுதந்திரம் எனும் சோலைக்கு அழைக்க பாடினான் ஒருமைப்பாட்டை ஆடினான் ஆனந்தக் கூத்து சுதந்திரம் அடைந்துவிட்டோமென காவியங்கள் பலவற்றால் ஈர்க்கப் பெற்று பன்மொழியில் தேர்ச்சி பெற்று தமிழ் பால் பற்றுடன் வாழ்ந்து தன் மொழியின் சிறப்பறிந்து எம்மொழிக்கும் ஈடுகொடுக்கும் கவிபுனைந்து எம் மொழிபோல் வேறில்லை என்று செருக்குடன் சொன்னான். அதனால் தன்மொழி வளம் பெற தந்தான் தமிழ் மொழியில் பிற மொழிக் காவியங்களையும் பாரதி ஒரு ஞான சடர் போர் முனையில் அறவழியும் மறவழியும் இருந்த போது பகைவனுக்கு நல்நெஞ்சை வேண்டினான் சித்தத்தில் ஞானத்தைப் தேடியவன் சிவத்தில் அன்பை போற்றியவன் ரத்தத்தில் தோய்ந்த சதைக்கு நித்தம் சக்தியை துணையாய் கொண்டவன் அவன் சிந்தனைகளை நம் சிரசில் ஏற்றி அவன் எண்ணங்களின் தேடலை நம் கண்களுக்கும் உள்ளத்திற்கும் கொடுத்து அவன் நடந்த பாதங்களையும் இம்மண்ணையும் வணங்குவோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X