பொது செய்தி

தமிழ்நாடு

இமானுவேல்சேகரன் வீரவணக்க நாள்

Added : செப் 12, 2020
Share
Advertisement

ஈரோடு: தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், தியாகி இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாள், ஈரோட்டில் நேற்று நடந்தது. அவரது உருவப்படத்துக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ், மாநகர செயலாளர் குமார், மாவட்ட மகளிரணி செயலாளர் சத்யா, தொழிற்சங்க நிர்வாகி குமார், பவானி ஒன்றிய செயலாளர் சோமு உட்பட பலர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் சிவகிரி, கொடுமுடி, கணபதிபாளையம், அரச்சலூர், அவல்பூந்துறை பகுதிகளில், த.ம.மு.க., சார்பில், இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு, நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவல்பூந்துறை நால்ரோட்டில், மொடக்குறிச்சி ஒன்றிய தலைவர் கார்த்திக் தலைமையில், நிர்வாகிகள் மரியாதை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X