பொது செய்தி

தமிழ்நாடு

சிப்காட்டில் 8 பேருக்கு தொற்று

Added : செப் 12, 2020
Share
Advertisement

சென்னிமலை: சென்னிமலை அருகே, ஈங்கூர் சிப்காட்டில், ஒரு தொழிற்சாலையில், பீஹார் மாநிலத்தை சேர்ந்த, எட்டு தொழிலாளர்களுக்கு, கொரோனா தொற்று நேற்று கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரும், 20 வயது முதல், 25 வயது வரையிலானவர்கள். இதேபோல் வெள்ளோடு பாலாஜி கார்டனில், ஒரு ஆண், ஒரு பெண்ணுக்கும், சென்னிமலை எல்லை மாகாளியம்மன் கோவில் வீதியில், 40 வயது பெண்ணுக்கும், தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சென்னிமலையில் அரசு வங்கி ஊழியர், சமீபத்தில் மதுரை சென்றார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், தொற்று உறுதியானது. இதையடுத்து வங்கி பணியாளர்கள் அனைவருக்கும், பி.சி.ஆர்., பரிசோதனை செய்யப்பட்டு, வங்கிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X