பொது செய்தி

தமிழ்நாடு

பாரதி நினைவு நூலகத்துக்கு பூட்டு: அஞ்சலி செலுத்த வந்தோர் ஏமாற்றம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

ஈரோடு: பாரதியார் நினைவு நூலகம் பூட்டப்பட்டிருந்ததால், அவரது உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்த வந்தோர், ஏமாற்றத்துடன் திரும்பினர்.


ஈரோடு, கருங்கல்பாளையம், பெரியமாரியம்மன் கோவில் வீதியில், சுப்ரமணிய பாரதியார், 1921ல் வாசக சாலையை திறந்து வைத்து, 'மனிதனுக்கு மரணமில்லை' என்ற தலைப்பில் பேசினார். இதுவே அவரின் கடைசி சொற்பொழிவாக அமைந்தது. இதனால் பாரதியார் இறுதி உரையாற்றிய நூலகம் என்ற பெயர் பெற்று, பாரதியார் நினைவு நூலகமானது. இங்கு நுழைவாயில் முன், பாரதியார் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது. அவரது பிறந்த நாள், நினைவு நாள், சுதந்திர தினம் உள்ளிட்ட நாட்களில், இந்த சிலைக்கு, மாணவர்கள் மற்றும் பாரதி உணர்வாளர்கள், சிந்தனையாளர்கள், மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர். பாரதியாரின், 99வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனால் வழக்கம்போல் பலர், அஞ்சலி செலுத்த வந்தனர். ஆனால், நூலகம் திறக்கப்படாததால், ஏமாற்றத்துடன் திரும்பினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: இன்று விடுமுறை என்பதால், நூலகத்தை பூட்டியிருக்கலாம். ஆனால், நுழைவாயில் கேட்டை திறந்து வைத்திருந்தால், பாரதியார் சிலை உள்ள பகுதிக்கு, சென்று மாலை அணிவித்திருக்க முடியும். ஒருவேளை அவரது நினைவு தினத்தை மறந்து விட்டார்களோ என்னவோ? இவ்வாறு அவர்கள் கூறினர்.

போலீசார் உத்தரவு: பாரதியார் நினைவு தினம் என்பதால், நேற்று காலை, அவரது சிலைக்கு மரியாதை செய்யும் வகையில், நூலகத்தை திறக்க வந்துள்ளனர். ஆனால், கருங்கல்பாளையம் போலீசார், சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதியில்லை. மேலும், நூலகத்தையும் திறக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளனர். இதனால் நூலக திறப்பு மட்டுமின்றி, சிலை திறப்புக்கும் அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X