பொது செய்தி

தமிழ்நாடு

நிலுவை கூலித்தொகை கேட்டு தி.மு.க., நெசவாளரணி தீர்மானம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

ஈரோடு: தி.மு.க., நெசவாளரணி, மாநில நிர்வாகிகள் கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். துணை தலைவர் நாகலிங்கம், செயலாளர் சச்சிதானந்தம் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். கொரோனா ஊரடங்கால் பாதித்துள்ள, நெசவாளர் குடும்பங்களுக்கு, தமிழக அரசு, 5,000 ரூபாய் நிவாரணத்தொகை வழங்க வேண்டும். மேலும், அனைத்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிலும், கொரோனாவால் ஜவுளிகள் முழுமையாக தேங்கி, நெசவாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். தேக்கமடைந்த ஜவுளியை, கோ-ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்து, நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். அரசுக்கு வழங்கப்பட்ட இலவச வேட்டி, சேலை மற்றும் பள்ளி சீருடைக்கான, நிலுவை கூலி தொகையை வழங்க வேண்டும். ஸ்டாலினை வரும் தேர்தலில், முதல்வராக்கும் வகையில், நெசவாளரணி நிர்வாகிகள் களப்பணி ஆற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X