பொது செய்தி

தமிழ்நாடு

கீழ்பவானி கிளை வாய்க்காலில் ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு

Added : செப் 12, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு குமலன்குட்டை பகுதியில், கீழ்பவானி கிளை வாய்க்காலை ஒட்டிய இடத்தில், பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் உள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதன்படி, உதவி பொறியாளர் தினகரன், மாநகராட்சி பொறியாளர் முருகானந்தம், வி.ஏ.ஓ., அழகிரிசாமி மற்றும் அதிகாரிகள், குமலன்குட்டை பகுதியில் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆய்வு செய்தனர். வாய்க்காலை ஆக்கிரமித்து, சிலர் வீட்டின் சுவர், பிற பயன்பாட்டு கட்டுமானங்கள் இருப்பது தெரியவந்தது. அவ்விடங்களில் அளவீடு செய்து, குறியீடு செய்யும் பணி நடக்கிறது. 'கண்டறியப்படும் ஆக்கிரமிப்புகளில் குறியீடு போடப்படும். முழு அளவில் அளவீட்டு பணிக்கு பின், ஆக்கிரமிப்பை அகற்றும்படி நோட்டீஸ் வழங்கப்படும். அவர்கள் அகற்றாத பட்சத்தில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X