சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபட் மீது பஸ் மோதல்: மகள் பலி; தாய் படுகாயம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

பவானி: ஈரோடு அருகே, மொபட் மீது அரசு பஸ் மோதிய விபத்தில், 11 வயது சிறுமி பலியானது, பலத்த சோகத்தை ஏற்படுத்தியது. ஈரோடு, மூலப்பாளையத்தை சேர்ந்தவர் சிவசங்கர். இவரின் மனைவி சுகன்யா, 38; இவர்களின் மகள் ஹர்ஷிதா, 11; தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். பவானி கூடுதுறை கோவிலுக்கு, ஹீரோ பிளசர் மொபட்டில், நேற்று காலை, 10:30 மணியளவில், சுகன்யா, ஹர்ஷிதா புறப்பட்டனர். அமராவதி நகர் பகுதியில் வந்தபோது, ஈரோட்டில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு சென்ற அரசு பஸ், எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் தாய், மகள் நிலைதடுமாறி விழுந்தனர். பலத்த படுகாயமடைந்த சிறுமி, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனையில், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. சுகன்யா சிகிச்சை பெற்று வருகிறார். சேலம் மாவட்டம் கொளத்தூரை சேர்ந்த பஸ் டிரைவர் முருகேசனிடம், சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X