பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி, வி.ஏ.ஓ., அலுவலகங்களில் ஒட்டப்பட்ட தகுதியற்ற பயனாளி விபரம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

சேலம்: பிரதமர் நிதி உதவி திட்ட மோசடியில், தகுதியற்ற பயனாளிகள் விபரம், வி.ஏ.ஓ., - ஊராட்சி அலுவலகம், ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்டுள்ளன.


சேலம் மாவட்டத்தில், 18 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கு, பிரதமர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளன. அதில், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர், தகுதியற்றவர் என கண்டறிந்து, 6 கோடி ரூபாய் வரை முறைகேடு கண்டறியப்பட்டது. பணத்தை மீட்க, 175 பேர் அடங்கிய குழுக்கள் அமைத்து, ஆய்வு நடந்து வருகிறது. இதுவரை, 1.86 கோடி ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் பொது சேவை மையங்களை சேர்ந்த, 10க்கும் மேற்பட்டோரின் விபரம் சேகரித்து, விசாரணை நடந்து வருவதாக, கலெக்டர் ராமன், நேற்று தெரிவித்தார். இந்நிலையில், ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், போலி பயனாளிகள் குறித்த விபரம், அந்தந்த கிராமங்களில் உள்ள, ஊராட்சி, வி.ஏ.ஓ., அலுவலகங்கள், ரேஷன் கடையில் ஒட்டப்பட்டுள்ளன. அதில், 'தவறாக பெற்ற உதவித்தொகையை, அவரவர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். செலுத்தாதவர் மீது, அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறப்பட்டுள்ளது. நேற்று, பெத்தநாயக்கன்பாளையம் வருவாய்த்துறையினர் சார்பில், அனைத்து கிராமங்களில், 'தவறான முறையில் பணம் பெற்றவர் வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும். இல்லை எனில், ரேஷன் அரிசி உள்பட, அரசின் திட்ட உதவிகளும் வழங்கப்படாது' என, 'தண்டோரா' மூலம் எச்சரித்தனர். அதேபோல், அனைத்து ஒன்றியத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X