பொது செய்தி

இந்தியா

இன்று முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கம்: தமிழகத்திற்கு 3 ரயில்கள்

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியா முழுவதும் இன்று (செப்.,12) முதல், கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து 3 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.இந்தியாவில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது, ஊரடங்கு கட்டுப்பாடுகள், படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு ரயில்களை,
சிறப்புரயில், ரயில்வே, தமிழகம்

புதுடில்லி: இந்தியா முழுவதும் இன்று (செப்.,12) முதல், கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து 3 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது, ஊரடங்கு கட்டுப்பாடுகள், படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு ரயில்களை, ரயில்வே நிர்வாகம் இயக்கி வருகிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் திரும்பி வருவதற்காக சிறப்பு ரயில்கள் விடப்படுவதாகவும், மாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் கூடுதல் ரயில்களை இயக்க தயார் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.


latest tamil news



இந்நிலையில், கூடுதலாக, 80 சிறப்பு ரயில்களை, இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, 230 ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (செப்.,12) முதல் கூடுதலா 80 புதிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு, நேற்று முன்தினம் (செப்.,10) துவங்கியது. இதில், தமிழகத்தில் இருந்து 3 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. சென்னை சென்ட்ரல் - டில்லி, சென்னை சென்ட்ரல் - சாப்ரா இடையே இருமார்க்கத்திலும் இன்று முதல் ரயில்கள் இயக்கப்படுகிறது. 15ம் தேதி முதல் திருச்சி - ஹவுரா இடையே இருமார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JSS - Nassau,பெர்முடா
12-செப்-202020:13:14 IST Report Abuse
JSS இப்போது ரயில்களுக்கு என்ன அவசரம். கொரோனவை பரப்புவதற்காகவா. பீயுஷ்ஜி கொஞ்சம் யோசியுங்கள.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
12-செப்-202020:02:52 IST Report Abuse
sankaranarayanan கொரோன வந்த பிறகு, எல்லா ரயில்பெட்டிகளும், எல்லா மாநில பஸ்களும் மிக மிக தூய்மையாக உள்ளன. பஸ்ஸில் உட்கார்ந்துகொண்டு பின்புறத்தை கண்ணாடி வழியாக வெகு சுலபத்தில் பார்க்க இயலும். உள்ளேயும் உட்காருமிடம் வெகு தூய்மையாக உள்ளது. இது நீடித்தால் நல்லது. கொரோன நீடிக்க வேண்டாம்
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
12-செப்-202014:46:12 IST Report Abuse
S. Narayanan மூழ்கினால் தான் முத்து எடுக்கமுடியும். கொரோனா என்று சொன்னால் ஒன்றும் ஆகிவிடாது. தகுந்த பாதுகாப்புடன் செயல் பட்டால் எதிலும் வெற்றி பெறலாம். எவ்வளவு நாள் பயந்து கொண்டிருப்பது. எல்லா ரயில்களை உடனே இயக்கவேண்டும். பொருளாதாரத்தை மீட்கவேண்டும். மக்களை காப்பாற்ற வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X