பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

Added : செப் 12, 2020
Share
Advertisement

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து, வினாடிக்கு, 10 ஆயிரத்து, 45 கனஅடியாக அதிகரித்தது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தீவிரம் அடைந்த பருவமழையால், நேற்று முன்தினம், வினாடிக்கு, 8,830 கனஅடியாக இருந்த, மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று, 10 ஆயிரத்து, 45 கனஅடியாக அதிகரித்தது. டெல்டா பாசனத்துக்கு, 6,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. திறப்பை விட வரத்து கூடுதலாக இருந்ததால், நேற்று முன்தினம், 91.66 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று, 91.89 அடியாக சற்று அதிகரித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X