பொது செய்தி

தமிழ்நாடு

ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி சாலையில் ஓடியதால் மக்கள் அவதி

Added : செப் 12, 2020
Share
Advertisement

சேலம்: சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி, உபரிநீர் வெளியேறி, சிவதாபுரம் சாலையில் ஓடியதால், இளம்பிள்ளை, சித்தர்கோவில் செல்லும் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.


சேலத்தில், சில நாளாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த கன மழையில், சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி, உபரிநீர் வழிந்தோடுகிறது. போதிய கால்வாய் வசதி இல்லாததால், சிவதாபுரத்தில், வெள்ளம் சூழ்ந்துள்ளது. சித்தர்கோவில், இளம்பிள்ளை செல்லும் பிரதான சாலையில், 2 அடி உயரத்துக்கு கழிவுநீருடன் கலந்து உபரிநீர் ஓடுகிறது. இதனால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும், தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏரி நிரம்பும் ஒவ்வொரு முறையில், இதே நிலை தொடர்வதால், மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.

இதுகுறித்து, மக்கள் கூறியதாவது: சேலத்திலிருந்து இளம்பிள்ளை செல்லும் பிரதான சாலையில், சித்தர்கோவில், முருங்கப்பட்டி, பனங்காடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. அங்கு செல்ல, பிரதான சாலை என்பதால், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால், சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறும்போது, இச்சாலையை கடக்க முடியாத அளவு, வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலையில் உள்ள பள்ளம் தெரியாததால், விபத்துகள் ஏற்படுகின்றன. சாலையில் தண்ணீர் ஓடாதபடி, உரிய வடிகால் வசதி அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X