சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்காதலனை தாக்கிய விவசாயிக்கு காப்பு

Added : செப் 12, 2020
Share
Advertisement

கெங்கவல்லி: மனைவியுடன் நெருக்கமாக இருந்த கள்ளக்காதலனை தாக்கிய, விவசாயியை, போலீசார் கைது செய்தனர்.


கெங்கவல்லி, நடுவலூர் ஊராட்சி, மோட்டூர், சுண்ணாம்புமேட்டை சேர்ந்த, விவசாயி அய்யம்பெருமாள், 45. இவரது மனைவி சின்னபொன்னு, 43. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த, அக்பர்அலி, 51, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று, அக்பர்அலி, சின்னபொன்னு தனிமையில் இருந்தபோது, அய்யம்பெருமாள் பார்த்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர், மண்வெட்டி, உருட்டு கட்டையால் அக்பர்அலியை தாக்கினார். படுகாயமடைந்த அவர், கவலைக்கிடமான நிலையில், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கெங்கவல்லி போலீசார், அய்யம்பெருமாளை கைது செய்து, ஆத்தூர் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஓமலூர் சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X