கால்வாய் அடைப்பால் மக்கள் அவதி

Added : செப் 12, 2020
Share
Advertisement

ஓமலூர்: கால்வாயை கடக்க முடியாதபடி அடைக்கப்பட்டதால், மக்கள் சுற்றிச்செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஓமலூர் ஒன்றியத்தில், நாரணம் பாளையம், காமலாபுரம் ஊராட்சி கிராம எல்லையில் மாந்தோப்பு பகுதி உள்ளது. இரு ஊர்களை இணைக்கும் வழியில், சரபங்கா உபரிநீர் வடிகால்வாய் செல்கிறது. சரபங்காவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, அந்த கிளை கால்வாயில், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஆனால், வெள்ளாப்பட்டி, தேக்கம்பட்டி, நாரணம்பாளையம் உள்ளிட்ட கிராம மக்கள், கால்நடை மருத்துவமனைக்கு காமலாபுரம் செல்ல, இந்த வழியை பயன்படுத்துகின்றனர். அதேபோல், காமலாபுரம் மக்கள், கருப்பூர் வழியாக சேலம் செல்லவும், இந்த வழியை பயன்படுத்துகின்றனர். தற்போது மாந்தோப்பு கால்வாயில், தண்ணீர் குறைவாக செல்கிறது. அங்கு, நெடுஞ்சாலைத்துறை(நபார்டு, கிராம சாலை அலகு) சார்பில், பாலம் கட்ட திட்ட வரைவு தயாரித்து, 2019ல் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், நாரணம்பாளையம் பகுதி பட்டாதாரர், கால்வாயை மக்கள் கடக்க முடியாதபடி, மண் கொட்டி அடைத்துள்ளார். அதேபோல், காமலாபுரம் பகுதி பட்டாதாரரும், சாலையில் மரத்தை நட்டு வைத்துள்ளார். இதனால், இரு கிராம மக்கள், 10 கி.மீ., சுற்றி சென்று அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, அதிகாரிகள் விசாரித்து, உரிய தீர்வு காண வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X