பொது செய்தி

தமிழ்நாடு

தக்காளி விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

Added : செப் 12, 2020
Share
Advertisement

அரூர்: அரூரில், தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தர்மபுரி மாவட்டத்தில், ஒடசல்பட்டி கூட்ரோடு, மொரப்பூர், கம்பைநல்லூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், 3,500க்கும் மேற்பட்ட ஏக்கரில், தக்காளி நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, சந்தையில் தக்காளி விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது: கடந்த மாதம், 24 வரை, 28 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி, 500 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர்ந்து, தக்காளி விலை அதிகரிக்கத் துவங்கியது. மாத இறுதியில், 28 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி, 800 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து, ஒரு கூடை தக்காளி தரத்தை பொறுத்து, 850 முதல், 900 ரூபாய் வரை விற்பனையாகிறது. தொடர் மழையால், செடிகளில் தக்காளி அழுகுவதால், அரூரில் தனியார் மண்டிகளுக்கு வரும் தக்காளியின் வரத்து பெருமளவு சரிந்துள்ளது. மேலும், வெளிமாவட்டங்களுக்கு தக்காளி அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது. இதுவும், விலை உயர்வுக்கு காரணமாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X