பொது செய்தி

தமிழ்நாடு

மன அழுத்தத்தை குறைக்க போலீசாருக்கு யோகா பயிற்சி

Added : செப் 12, 2020
Share
Advertisement

அரூர்: அரூரில், போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க நேற்று யோகா பயிற்சி வழங்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம், அரூர் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட கம்பைநல்லூர், மொரப்பூர், அரூர், கோட்டப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, அரூர் அனைத்து மகளிர், பாப்பி ரெட்டிப்பட்டி, கோபிநாதம்பட்டி, பொம்மிடி, கடத்தூர் என, மொத்தம், 10 ஸ்டேஷனில் பணி புரியும் போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், ஒரு வாரத்திற்கு போலீசாருக்கு யோகா பயிற்சி வழங்க, அரூர் டி.எஸ்.பி., தமிழ்மணி ஏற்பாடு செய்துள்ளார். முதல் நாளான நேற்று, அரூர் புனித மரியன்னை துவக்கப்பள்ளி வளாகத்தில், காலை, 6:30 முதல், 8:00 மணி வரை நடந்த பயிற்சியில், போலீசார் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு, தியானம், மூச்சுப்பயிற்சி, ஆசனங்களை உடற்கல்வி ஆசிரியர் வேடியப்பன் வழங்கினார். தினமும், காலையில் ஆசனங்கள் செய்தால் மன அமைதியும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என, அவர் தெரிவித்தார். தொடர்ந்து, போலீசாருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. போக்குவரத்து எஸ்.ஐ., ராமமூர்த்தி உள்பட, 60 போலீசார் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X