பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை'

Added : செப் 12, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள், நியமிக்கப்பட்ட அலுவலர்களின் பணிகள் குறித்து, ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., சாந்தி முன்னிலை வகித்தார்.


பின்னர் கலெக்டர் பேசியதாவது: சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மூலமாக, அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள, மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளில், பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். தொற்று வராமல் தடுக்க, அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். காய்ச்சல் முகாம்களை அதிகமாக நடத்த வேண்டும். தற்போது, பருவமழை காலமாக உள்ளதால், பொது மக்களுக்கு காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு சென்று, மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளை உட்கொள்ளவேண்டும். நன்கு காய்ச்சிய குடிநீரை, மக்கள் குடிக்க வேண்டும். கொரோனா தொற்று குறித்து, மக்கள் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் பேசினார். அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துசெல்வன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பரமசிவன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X