பொது செய்தி

தமிழ்நாடு

உயர்ந்து வரும் கே.ஆர்.பி., அணை நீர்மட்டம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: தொடர் மழையால், கே.ஆர்.பி., அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த பத்து நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஓசூர் கெலவரப்பள்ளி அணை நிரம்பி, அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர், தென்பெண்ணை ஆற்றில் வந்து கொண்டிருப்பதால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த, 1ல், கே.ஆர்.பி., அணை நீர்மட்டம், 28 அடியாக இருந்த நிலையில், பத்து நாட்களில், 6 அடி உயர்ந்து நேற்று அணை நீர்மட்டம், 52 அடியில், 34.65 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு, 224 கன அடிநீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து, 92 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கெலவரப்பள்ளி அணையில் இருந்து, 480 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நீர்வரத்து அதிகரித்ததால், அணைக்கு வந்து கொண்டிருந்த, 960 கன அடி தண்ணீர் அப்படியே ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X